

ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கில், கொள்ளை யர்கள் பயன்படுத்திய கட்டிங் பிளேடு கிடைத்ததாக கூறப்படுகிறது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி வந்த ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவதற்கான ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் தனி பெட்டியில் கொண்டுவரப்பட்டன. வழியில் மர்ம நபர்கள் சிலர், ரயிலின் மேற்கூரை யில் துளையிட்டு ரூ.5.75 கோடியை கொள்ளையடித்து சென்றுவிட்ட னர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வங்கி அதிகாரிகள், பார்சல் நிறுவன ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் என பலதரப்பு நபர்களிடம் விசாரணை நடத்தியும் சிபிசிஐடி போலீஸாருக்கு எந்தத் தடயமும் சிக்கவில்லை. இதனால், ரயில் சென்ற வழித்தடத்தில் சிபிசிஐடி போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நடந்தே சென்று சோதனை செய்தனர்.
இந்நிலையில், சேலம் அருகே ஒரு புதர் பகுதியில் இருந்து கட்டிங் பிளேடு ஒன்றை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதில், ரயிலின் மேற்கூரையை வெட்டியதற்கான தடயங்கள் இருந் துள்ளன. எனவே, கொள்ளை சம்ப வம் சேலத்தில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி அதிகாரி கள் சேலத்தில் முகாமிட்டு விசா ரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் எதுவும் சிக்காத நிலையில், ரயிலின் மேற்கூரையை வெட்டுவதற்கு பயன்படுத்திய கட்டிங் பிளேடை சிபிசிஐடி போலீ ஸார் கண்டுபிடித்துள்ளது திருப் பத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்கள் பயன்படுத்திய கட்டிங் பிளேடு கண்டுபிடிக்கப்பட் டது குறித்து சிபிசிஐடி போலீஸா ரிடம் கேட்டபோது, பதிலளிக்க மறுத்துவிட்டனர்.