

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் உள்ள சர்க் கரை ஆலையில் நிகழ்ந்த விபத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இந்த ஆலையில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர். கும்ப கோணம் அருகேயுள்ள அண்டக் குடி முத்துகிருஷ்ணன் (40), வீராஞ்சேரி முருகானந்தம் (25) ஆகியோர் வெல்டர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.
இந்த ஆலையில் நேற்று முன் தினம் பாய்லர் திடீரென வெடித்த தில், பணியில் இருந்த முத்துகிருஷ்ணன், முருகானந்தம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சக தொழிலாளர்கள் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நேற்று தகவல் அளித்துள்ளனர். பலியான முத்துகிருஷ்ணனுக்கு மனைவி ஜோதி (33), மகன்கள் தாமரைச்செல்வன் (13), அருண் குமார் (11) உள்ளனர். முருகானந் தத்துக்கு திருமணமாகவில்லை.
இதுகுறித்து சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் குடும்பத்தினர் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லையாம். “இருவரது உடல்களையும் மீட்டு தமிழகம் கொண்டு வரவும், அவர்களுக்குரிய இழப்பீட்டை ஆலை நிர்வாகத்திடமிருந்து பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி, தஞ்சை ஆட்சியர் என்.சுப்பையனிடம் அவர்களது குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இருவரின் உடல்களும் இன்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படுகிறது.