

நடுரோட்டில் ஒரு குடும்பத்தை கண்மூடித்தனமாக தாக்கிய 3 போலீஸாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று மறுக்கப்பட்டோர் நீதிக்கான அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடி கிராமத்தில் வசிப்பவர் ராஜா. இவர், செங்கம் பேருந்து நிலையம் அருகே தன் மனைவியுடன் நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டுள் ளார். அப்போது, அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீஸார் தகராறை தடுத்துள்ளனர். பின்னர் போலீஸாருக்கும், தம்பதிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் ஆத்திரமடைந்த செங்கம் காவல் நிலைய போலீஸார் நம்மாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா, அவரது மனைவி மற்றும் மகனை சுற்றி வளைத்து தாக்கினர். அதன் வீடியோ காட்சி வெளியானது. இதையடுத்து, 3 போலீஸாரும் வேலூர் ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், காவல் நிலை யத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ராஜா குடும்பத் தினர் நேற்று முன்தினம் இரவு விடுவிக்கப்பட்டனர். இந்நிலை யில் நேற்று ராஜா, அவரது மனைவி மற்றும் மகன் ஆகி யோர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களிடம், சென்னையைச் சேர்ந்த மறுக்கப்பட்டோர் நீதிக் கான அமைப்பினர் நேரில் சென்று நடந்த சம்பங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இதுகுறித்து அந்த அமைப் பின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக் கியதாஸ் கூறும்போது, “ராஜா குடும்பத்தினரை தாக்கிய 3 போலீஸார் மீது வழக்கு பதிவு செய்து, சஸ்பெண்ட் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத் தினரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். அவர் களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எங்களது விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.