Published : 04 Jun 2017 10:53 AM
Last Updated : 04 Jun 2017 10:53 AM

ஆசியாவிலேயே முதல்முறையாக நோயாளிக்கு பொருத்தப்பட்ட 2-வது இதயம்: கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள் சாதனை

ஒரு இதயம் இயங்கிக் கொண்டிருந்தபோதே, மற்றொரு இதயம் பொருத்தி, கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆசியாவிலேயே முதல்முறையாக இந்த அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாகவும், அவரது 2 இதயங்களும் நன்றாக இயங்குவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை கே.எம்.சி.ஹெச். இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் பிரஷாந்த் வைஜயநாத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பொதுவாக இதயம் செயல் இழந்தால், இதய மாற்று அறுவைசிகிச்சை, நுரையீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை, செயற்கை இதய மாற்று அறுவைசிகிச்சை ஆகிய 3 முறைகளில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படும். இதயம் துடித்துக் கொண்டிருந்தபோதே, ஒரு நோயாளிக்கு இதய மாற்று அறுவைசிகிச்சை (ஹெட் ரோடாபிக்) கே.எம்.சி.ஹெச்-ல் செய்யப்பட்டுள்ளது.

பாலக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் (45) என்பவருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்பட்டது. நுரையீரல் பகுதியில் உயர் அழுத்தம் இருந்ததால், வழக்கமான முறை யில் அறுவைசிகிச்சை செய்ய முடியவில்லை. இதையடுத்து, அவரது இதயம் இயங்கும் நிலையிலேயே அறுவைசிகிச்சை மூலம் மற்றொரு இதயம் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயத்தை, சுரேஷின் வலதுபுறத்தில் பொருத்தினோம். இதய தமினி குழாய்களை நேரடியாக இணைக்கும் மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நோயாளியின் இதயம் இயங்கும்போதே மற்றொரு இதயம் பொருத்தப்பட்டது.

நோயாளியின் இதயத்தில் 10 சதவீத இடம்தான் அறுவை சிகிச்சை செய்ய ஏற்றதாக இருந்தது. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம் சிறியதாக இருந்ததால், நோயாளிக்கு கச்சி தமாகப் பொருந்தியது. நோயாளி யின் இரு இதயங்களிடையே 5 இணைப்புகள் உள்ளன. 2 ரத்த நாளங்கள் சுத்தமான ரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. 3 ரத்த நாளங்கள் அசுத்த ரத்தத்தை வெளியேற்றுகின்றன. இவற்றையும், மேல்பெருஞ்சிரை, கீழ்பெருஞ்சிரை, இதய தமனி உள்ளிட்டவற்றையும் இணைப் பது சவாலாக இருந்தது.

உலகில் 4 மையங்களில் மட்டுமே இதுபோன்ற இதய மாற்று அறுவைசிகிச்சை செய்வ தற்கான நிபுணர்களும், நவீன மருத்துவக் கருவிகளும் உள் ளன. ஆசியாவில் முதல் முறை யாக கே.எம்.சி.ஹெச்-ல் இந்த புதுமையான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப் பட்டுள்ளது. எனது தலைமையில், டாக்டர்கள் தாமஸ் அலெக் ஸாண்டர், சுரேஷ்குமார், விவேக் பதக் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் இந்த அறுவைசிகிச் சையை கடந்த மே 30-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொண் டோம். அந்த நோயாளியின் இரு இதயங்களும் தற்போது நன்றாக செயல்படுகின்றன என்றார்.

அரிய, சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினரை, கே.எம்.சி.ஹெச். தலைவர் நல்ல ஜி.பழனிசாமி பாராட்டினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x