நீட் விவகாரம்: அமைச்சர்கள் டெல்லி பயணம்

நீட் விவகாரம்: அமைச்சர்கள் டெல்லி பயணம்
Updated on
1 min read

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக் கும் மசோதாவுக்கு குடியரசுத் தலை வரின் ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை விரைவுபடுத்தும் வகை யில் தமிழக சுகாதார, உயர்கல்வித் துறை அமைச்சர்கள், துறை செய லாளர்கள் கொண்ட குழுவினர் ஓரிரு நாளில் டெல்லி செல்ல உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வைப் பொருத்தவரை தமிழக மாணவர் களின் நிலையை மத்திய அமைச் சர் பிரகாஷ் ஜவடேகரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலை வரின் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச் சர் ஜே.பி.நட்டாவை 8-ம் தேதி சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். முதல்வர் அனுமதியோடு நானும், உயர்கல்வித் துறை அமைச் சர் கே.பி.அன்பழகன், அரசு செய லாளர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாளில் டெல்லி செல்ல உள்ளோம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in