

தமிழக முதல்வராக சசிகலா வுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தீபா பேர வையினர் 200 பேர் கைது செய் யப்பட்டனர்.
சசிகலா முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தீபா பேரவை யைச் சேர்ந்த சுமார் 200 பேர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளி கைக்கு நேற்று காலை வந்தனர். ஆளுநர் மாளிகைக்குள் அவர் களை அனுமதிக்க போலீஸார் மறுத்து விட்டனர். இதையடுத்து, ஆளுநர் மாளிகையை முற்றுகை யிட்டு தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து கிண்டி போலீஸார் விரைந்து வந்து போராட் டக்காரர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.