

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்ற அறைகளுக்குள் சிசி டிவி கண்காணி்ப்பு கேமராக் கள் பொருத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தில் வழக்கறிஞர் எஸ். காசி ராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘‘அனைத்து பொது இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக நீதிமன்றங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேம ராக்கள் கிடையாது. வழக்கறி ஞர் சட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ள புதிய திருத்தங்களின் படி, நீதிபதிக்கு எதிராக கை நீட்டி, உரத்த குரலில் மிரட்டும் விதமாக வாதிடும் வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்ய நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள் ளது. தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இக்காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்ற அறை களுக்குள்ளும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி னால், வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளும், வக்கீல் கள் எவ்வாறு நடந்து கொள் கின்றனர்? என்பதை உறுதி செய்ய முடியும். அவற்றை வெளிப்படையாக வெளியிடா விட்டாலும் தேவைப்படும் போதும், பாதுகாப்பு காரணங் களுக்கு பயன்படுத்தலாம்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ‘‘இது தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத் துவது குறித்தும், அதற்கான நிதி தேவை குறித்தும் மீண்டும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. மேலும் ஒரே கட்டமாக அனைத்து இடங்களிலும் கண் காணிப்பு கேமராக்களை பொருத்த முடியாது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘தமிழகத்தில் உள்ள நீதிமன் றங்களுக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என்பது தமிழக அரசின் நிதி நிலைமை யோடு தொடர்புடைய நட வடிக்கை. ஏற்கெனவே மத்திய அரசு நிதி, முறையாக செல விடப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக தமிழக அரசு ஆகஸ்ட் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.