

திண்டுக்கல் மாநகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேயராக பதவி வகித்த வி.மருதராஜ் ஒதுங்கிக் கொண்டதையடுத்து அவரது மகன், மகளுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. இதனால் மேயர் வேட்பாளராக மருதராஜின் மகளுக்கு வாய்ப்பு அதிகரித் துள்ளது.
நகராட்சியாக இருந்த திண்டுக் கல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியாக்கப்பட்டது. நகராட்சித்தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த வி.மருத ராஜ் மேயராகவும், வார்டு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்களாகவும் செயல் பட்டனர். இவை தவிர, வேறு எந்த மாற்றமும் மாநகராட்சியான பிறகும் நடைபெறவில்லை. எல்லை விரிவாக்கம் இல்லாத தால், நகராட்சியாக இருந்தபோது இருந்த 48 வார்டுகளுக்கு தான் தற்போதும் தேர்தல் நடைபெறுகிறது.
முதன்முறையாக, மேயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தற்போதுதான் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி பெண் ணுக்கு ஒதுக்கப்பட்டதால் மேயராக இருந்த வி.மருதராஜ் விலகிவிட்டார். அதேசமயம், அவர் மாவட்ட செயலாளராகவும் இருப்பதால், தனது மகன் பிரேம் என்ற வீரமார்பனுக்கு 8-வது வார்டிலும், தனது மகள் பொன்முத்துவுக்கு 10-வது வார்டிலும் வாய்ப்பு பெற்று தந்துள்ளார்.
17 கவுன்சிலர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் ஆண்கள். இவர்கள் கட்சியில் மூத்தவர்களாக இருந்தபோதும் திண்டுக்கல் மாநகராட்சி பெண் களுக்கு ஒதுக்கப்பட்டதால் மேய ருக்கான போட்டியில் இவர்கள் இல்லாமல் போய் விட்டனர்.
மாநகராட்சியில் 23 பெண்கள் போட்டியில் இருந்த போதும். கட்சியில் முக்கிய பொறுப்புகளிலோ முழுநேர அரசியலிலோ இல்லை. இதனால் அரசியல் பின்புலத் துடன் உள்ள ஒரே பெண் 10-வது வார்டை சேர்ந்த மேயரின் மகள் பொன் முத்துதான் என்பதால், அவர் வெற்றிபெற்று அவரது கட்சியை சேர்ந்தவர்கள் அதிகம் வெற்றிபெறும் நிலையில் மேயராக அதிக வாய்ப்புள்ளது.