

கோவை ரயில் நிலையம் முதலா வது நடைமேடை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பயணி ஒருவர் கையில் பையுடன் நின்றுகொண்டி ருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததால் வைத்திருந்த பையை ரயில்வே போலீஸார் சோதனையிட்டனர்.
அதில் 2 கிலோவுக்கும் அதி கமான தங்க ஆபரணங்கள் இருந்தது தெரிந்தது. ஆனால், அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ஆபரணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அந்த நபரையும் காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்ற னர்.
விசாரணையில், தங்க ஆபரணங் களை எடுத்து வந்தவர், கேரள மாநிலம் திருச்சூர் கூர்கஞ்சேரி யைச் சேர்ந்த ஜெ.ஜோஃபி(38) என்பதும், கோவையில் இருந்து எர்ணாகுளத்தில் உள்ள தங்க நகைக் கடைக்கு ஆபரணங்களை ஒப்படைப்பதற்காக எடுத்துச் சென் றதும் தெரியவந்தது என்று போலீஸார் தெரிவித்தனர்.