சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது: 700 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும்

சென்னை புத்தகக் காட்சி இன்று தொடங்குகிறது: 700 அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறும்
Updated on
2 min read

40-வது புத்தகக் காட்சி சென்னை யில் இன்று தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி பிரமாண்ட மான புத்தகக் காட்சியை கடந்த 39 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தாண்டு 40-வது புத்தகக் காட்சி கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இன்று தொடங்கி, வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சி குறித்து ‘பபாசி’ பொருளாளர் கோ.ஒளிவண்ணன் கூறும்போது, “சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 700 அரங்கு களுடன் பிரம்மாண்டமாக அமைக் கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் வாசகர்களின் அறிவுப்பசிக்கு விருந்தாக அமையும்” என்றார்.

வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியில் தமிழ், மலையாளம், ஆங்கில நூல்களுக்காக தனித்தனியே அரங்குகள் உள்ளன. இதில், 350 பதிப்பாளர்களும், 100-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களும் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு இலக்கான ரூ.15 கோடியைவிட இந்தாண்டு கூடுதலாக ரூ.5 கோடிக்கு புத்தகங்களை விற்க ‘பபாசி’ இலக்கு நிர்ணயித்துள்ளது.

புத்தகக் காட்சி நடக்கும் பள்ளி வளாகத்தில் சுமார் 800 கார்கள், ஆயிரத்து 500 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாகனங்கள் வந்தால் பச்சை யப்பன் கல்லூரி வளாகத்தில் அவற்றை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட் சிக்கு வரும் வாகனங்கள் பூந்த மல்லி நெடுஞ்சாலை வழியாக பள்ளிக்குள் நுழைந்து, புது ஆவடி சாலை சங்கர் தெரு வழியாக வெளியே செல்லலாம்.

பணத் தட்டுப்பாட்டைச் சமா ளிக்க அனைத்து அரங்குகளிலும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன் படுத்த வசதியாக ஸ்வைப்பிங் மிஷின்களை வைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், ‘பபாசி’ சார்பில் 50 ஸ்வைப்பிங் மிஷின் கள் வைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, சில்லறை செலவுக்காக ரூ.100, ரூ.50-க்கான டோக்கன் களைத் தரவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கண்காட்சி வளாகத் தில் சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளின் ஏடிஎம் மையங்களும் அமைக்கப்பட்டுள் ளன. வாசகர்களுக்கு தரமான உணவு வழங்க உணவகங்களும் உள்ளன.

போதிய குடிநீர், கழிப்பிட வசதி களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் போன்ற வையும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் 14 நாட்களும், மாலை 6 மணியளவில் பல்வேறு துறை நிபுணர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள், மாணவர் களுக்கான போட்டிகள், குறும்பட போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக முதன்முறையாக ‘பபாசி’ (BAPASI) என்ற செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதை மொபைல் போனில் டவுன்லோடு செய்து கொண்டால், விரும்பும் அரங்கை தேடி அலைய வேண்டியதில்லை. அந்த செயலியைப் பார்த்து அரங்குக்கு நேரடியாகப் போய் புத்தகம் வாங்கிக் கொண்டு நேரத்தை மிச்சப்படுத்தலாம். கண்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி பற்றிய விவரங்களையும் இந்த செயலியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கண்காட்சிக்கு செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.10. ஒருவர் தினமும் வர விரும்பினால் ரூ.50 செலுத்தி சீசன் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். குடும் பத்தோடு தினமும் வர விரும்புவோருக்கான கட்டணம் ரூ.100. இதுபற்றிய விவரத்தையும் செயலியில் பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in