

சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக எம்.எல். தனித் தேர்வு முடிவு 23-ம் தேதி (இன்று) வெளியிடப்படுகிறது. ஜூனில் நடைபெறவுள்ள தேர்வுக்கு ஏப்ரல் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2010-11 முதல் 2016-17-ம் கல்வி ஆண்டில் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப் பிக்க தகுதியுடையவர். விண்ணப்ப படிவங் களை பல்கலைக்கழக இணையதளத்தில் (>www.unom.ac.in) பதிவிறக்கம் செய்யலாம்.