

தமிழகத்தில் ரூ.5.39 கோடியில் கட்டப்பட்ட 9 சார் கருவூல அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழகத்தில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் சார் கருவூலங்களுக்கு, சொந்த கட்டிடங்கள் கட்டப்படும் என நிதித்துறை மானிய கோரிக் கையின் போது முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன் படி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14.42 கோடியில் 25 சார் கருவூல அலுவலக கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் 3 ஆயிரத்து 60 சதுரடி பரப்பில், தரை மற்றும் 2 தளங்களுடன் காப்பறை, சாய்தளம், மாற்றுத் திறனாளிகளுக்கான அறை உள் ளிட்ட வசதிகளுடன் சார் கருவூல கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி, முது குளத்தூர், தாம்பரம். திரு விடைமருதூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நெல்லை மற்றும் ஆலங்குளம் ஆகிய இடங்களில் 8 சார் கருவூல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
காணொலி காட்சி மூலம்..
மொத்தம் ரூ.5 கோடி 39 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 9 சார் கருவூல அலுவலக கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், தலைமைச் செயலர் பி.ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன். நிதித் துறை செயலர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.