

ராம்குமாரின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண் டும். உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் பிரேத பரி சோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரத்தில் ராம்குமாரின் உறவினர்களும், கிராம மக்களும் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென் காசி- செங்கோட்டை- திருமலை கோயில் ஆகிய 3 சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட் டத்தில் ராம்குமாரின் தாயார் புஷ்பம் மற்றும் சகோதரிகள் மது பாலா, காளீஸ்வரி, அவர்களது உறவினர்கள், மீனாட்சிபுரம் கிராம மக்கள் மற்றும் விடுதலை சிறுத் தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்றனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றி ருந்த ராம்குமாரின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற் பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களு டன் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகளை அரசின் கவனத் துக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.
பேருந்துகள் மீது கல்வீச்சு
ராம்குமார் தற்கொலை சம்பவம் எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், வி.கே.புரம், மன்னார்கோயில் விலக்கு ஆகிய பகுதிகளில் அரசு பேருந்துகள் நேற்று முன்தினம் இரவில் கல்வீசி தாக்கப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து பாபநாசத்துக்கு சென்றுகொண்டி ருந்த 2 பேருந்துகள் மீது அகஸ் தியர்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசிவிட்டு தப்பினர். இதில் பேருந்து களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.