

திமுக மாணவரணி செயலாள ராக காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. எழிலரசன் நியமிக்கப் பட்டுள்ளார்.
திமுக மாணவரணிச் செயலா ளராக கடலூர் தொகுதி முன் னாள் எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தார். மாணவரணிச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட புகழேந்திக்கு தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுக பேச்சாளரான எழிலர சன் தமிழகம் முழுவதும் அதிக மான கூட்டங்களில் பங்கேற்ப வர் என்பதால் அவருக்கு இப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.