ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
Updated on
1 min read

சென்னையில் ஒரே நாளில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 11 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார். அதன்படி, கோட்டூரைச் சேர்ந்த ரவி (42), சதீஷ்குமார் என்கிற பரட்டை சதீஷ் (25), மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் (33), அடை யாறைச் சேர்ந்த ராம்குமார் (22), வடபழனியைச் சேர்ந்த குண்டு விஜய் என்கிற விஜய் குமார் (42), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மகா மணி (31), விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்கிற முத்து என்கிற மாரிமுத்து (24), வியாசர்பாடியைச் சேர்ந்த பிரகாஷ் (24), ரவுண்ட் பில்டிங் மூர்த்தி என்கிற மூர்த்தி (26), கொசப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் என்கிற சதீஷ்குமார் (22), முகமது ஆசிப் (29) ஆகிய 11 பேரும் நேற்று குண்டர் தடுப்பு காவலில் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in