

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலை யில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை யால் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகளும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அண்ணாசாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, வடபழனி ஆற்காடு சாலை, சாந்தோம் சர்ச் சாலை, திருவொற்றியூர் நெடுஞ் சாலை, ராயப்பேட்டை நெடுஞ் சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் கடுமையாக சேத மடைந்துள்ளன. அவை மேடும், பள்ளமுமாக காட்சி அளிக்கிறது.
குறிப்பாக சுங்கச்சாவடியில் இருந்து திருவொற்றியூர் செல்லும் நெடுஞ்சாலை, மணலியில் இருந்து மிஞ்சூர் செல்லும் சாலை, வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் சாலைகள், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் சாலை, அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி உட்புறசாலைகள், எழும்பூர் நெடுஞ்சாலை, புதுப்பேட்டை ஹாரீஸ் சாலை, வேளச்சேரியில் இருந்து கிழக்கு தாம்பரம் செல்லும் சாலை ஆகியவை கடுமையாக சேதமடைந்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கின்றன.
அரசுப் போக்குவரத்து கழகங் களின் தொழிலாளர் சம்மேளனத் தின் (ஏஐடியுசி) பொருளாளர் எஸ்.கஜேந்திரன் இதுபற்றி கூறியதாவது:
மழை காரணமாக பெரும் பாலான சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. முக்கியமான சாலைகள்கூட மேடு பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. பஸ்களை சரியான நேரத்துக்கு இயக்க முடியவில்லை. பஸ்களின் டயர் களும் சேதமடைகின்றன. சில இடங்களில் பஸ்கள் திடீரென பிரேக் டவுன் ஆகிவிடுகிறது. சாலைகளில் பள்ளம் ஏற்பட்டு கற்கள் குவிந்துள்ளன. இதனால், சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை களை நல்ல முறையில் பரா மரித்தால்தான் சீரான முறையில் பஸ்களை இயக்க முடியும். எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சாலைகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பராமரிப்பு பணிகள்
இது தொடர்பாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சென்னை மாநகர எல்லைக் குட்பட்ட அண்ணாசாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை உட்பட 6 சாலைகளை மட்டுமே நாங்கள் பராமரிக்கிறோம். இந்த சாலை களில் சேதம் அதிகமாக இல்லை. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர, சேதமடைந்துள்ள பகுதி களை அடையாளம் கண்டு, விரை வில் பராமரிப்பு அல்லது புதுப்பிக் கும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.
ஓரிரு நாளில் அறிக்கை
இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட இடங்களில் சேதமடைந் துள்ள சாலைகளை கணக்கெடுக் கும் பணிகள் வேகமாக நடந்து வரு கிறது.
ஓரிரு நாட்களில் சேதமடைந்த சாலைகளின் எண்ணிக்கை மொத்தமாக தெரியவரும். தற் போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள சேதமடைந்த சாலைகளில் உடனுக்குடன் பணிகளை மேற் கொள்ள சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது’’ என்றார்.