

அரும்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம், ஹோட்டல்கள், கடைகளை வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி யது. கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கேட்டு சென்னை உள் ளிட்ட தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள், பெண்கள் உள் ளிட்ட பொதுமக்கள் கலைந்து செல்வதற்காக போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர் நிகழ்வாக தடியடி, கல்வீச்சு, தாக்குதல் போன்ற சம்பவங்கள் சென்னையில் அரங்கேறின.
சென்னை மெரினா கடற்கரை யில் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டிருந்தவர்களை போலீஸார் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தி யதைத் தொடர்ந்து, சென்னை யில் பல இடங்களிலும் கலவரக் காரர்கள் வன்முறையில் ஈடுபட் டனர்.
மெட்ரோ ஊழியர்கள் ஓட்டம்
அரும்பாக்கம் 100 அடி சாலையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்குள் இரவு 9 மணி அளவில் ஒரு கும்பல் புகுந்தது. ரயில் நிலைய கண்ணாடி ஜன்னல்கள், கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கி, ரயில் நிலையத்தை சூறையாடினர். பயந்துபோன மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் அலறியடித்து ஓடினர்.
பின்னர், அருகே இருந்த ஹோட்டல்கள் மீதும் அந்த நபர்கள் கல்வீசி தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். 100 அடி சாலையில் கும்பலாகச் சென்று, கண்ணில்பட்ட கடைகளை எல்லாம் தாக்கி னர். 2 ஏடிஎம்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ஹோட்டல்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் இக்காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன் அடிப்படையில் வன்முறை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.