Published : 07 Jan 2017 09:15 AM
Last Updated : 07 Jan 2017 09:15 AM

ஜெ.வுக்கு பாரத ரத்னா விருது கோரிய மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தொடர்பாக பொதுநல வழக்குக்கான தமிழக மையத் தின் நிர்வாக அறங்காவலரான மதுரை கே.கே.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. இவர் கடந்த டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் இறந் தார். ஜெயலலிதா தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை பொது வாழ்வுக்காகவே செல விட்டுள்ளார். திரைப்படத் துறையில் பல விருதுகளை பெற்றுள்ளார்.

விலையில்லா கறவை மாடு, ஆடு, ஏழை எளியவர்கள் பசியாற அம்மா உணவகம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், சைக்கிள், தொட்டில் குழந்தை திட்டம் என்று பல திட்டங்களின் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதை யும் மக்களுக்காக அர்ப்பணித்த ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வழங்கக் கோரி கடந்த டிசம்பர் 15-ம் தேதி பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோருக்கு மனு அனுப்பி யும் நடவடிக்கை இல்லை. எனவே, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், யார், யாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது. மேலும் இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x