

சட்டப்பேரவையில் நேற்று கைத் தறி மற்றும் துணிநூல் துறை, தொழி லாளர் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப் போது, திருவெறும்பூர் திமுக உறுப் பினர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, காஞ்சிபுரம் பட்டின் தரம் தொடர்பாக பேசினார். இதற்கு பதிலளிக்க கைத்தறித்துறை அமைச் சர் ஓ.எஸ்.மணியன் எழுந்ததும், திமுக சார்பில் கன்னிப்பேச்சில் குறுக்கிட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மீண்டும் பேச்சை தொடர்ந்த போது, திமுக உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் பட்டுப் பூங்கா தொடர்பாக பேசினார். அதற்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எழுந்து பதிலளித்தார். அப்போது அவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பாக பேசியதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசி முடித்ததும், அமைச்சர் கள் எடப்பாடி பழனிசாமி, பி.தங்க மணி, எஸ்.பி.வேலுமணி, செல் லூர் கே.ராஜூ ஆகியோர் பதிலளித் தனர். அப்போதும், திமுகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதனால் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கு வதாக பேரவைத் தலைவர் அறிவித் தார். “நான் பேசியதை நீக்கும் போது, அமைச்சர் பேசியதையும் நீக்க வேண்டும்” என ஸ்டாலின் வாதிட்டார். இறுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தான் பேசியதை மாற்றி எடுத்துக்கொள்ளுமாறு கூறியதையடுத்து, அவையில் அமைதி ஏற்பட்டது.