

ஆந்திரா மாநில காவல்துறையால் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை விரைந்து நடத்தும் முயற்சியை தமிழக அரசு மேற் கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சேஷாசலம் வனப் பகுதியில் தமிழக தொழி லாளர்கள் 20 பேரை அம்மாநில காவல்துறை சுட்டுக் கொன்றது. இந்த சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வில்லை என்பதை வலியுறுத்தியும், படுகொலை நிகழ்த்திய காவல் துறையினருக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கை வேகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று முன்தினம் இரவு தருமபுரியில் பொது உரை யாடல் நிகழ்ச்சி நடந்தது. மக்கள் கண்காணிப்பகம் அமைப்பும், மனித உரிமைகளுக்கான குடி மக்கள் இயக்கமும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தி ருந்தன.
மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநர் ஹென்றி டிபென் கூட்டத்தில் பேசிய தாவது : 20 தமிழர்கள் சுட்டுக் கொல் லப்பட்ட வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில காவல்துறையால் நடத்தப்பட்ட இந்த படுகொலை குறித்து அந்த மாநில அரசு நிய மித்த குழுவே விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும். இதுபோன்று பாதிக்கப்படுவோருக்கு உதவ தமிழக அரசு இலவச சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர்களை அனுப்பி உதவ வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவ னர் வேல்முருகன், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, திரைப்பட இயக்குநர் களஞ்சியம், தமிழர் முன் னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.