பேரவைத் தலைவரின் புகாருக்கு திமுக கண்டனம்

பேரவைத் தலைவரின் புகாருக்கு திமுக கண்டனம்
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தலைவரின் குற்றச்சாட்டுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவையின் மரபு களையும், நெறிமுறைகளையும் புதைகுழியில் தள்ளிய பேரவைத் தலைவர் பி.தனபால், ‘நான் தாழ்த் தப்பட்டவன் என்பதால் என்னை அவமதிக்கிறார்கள்’ என்று அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார். தனது பதவிக் குண்டான கண்ணியத்தையும் மீறி திமுக மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

அவர் வணங்கும் அதிமுகவி னரைவிட பேரவைத் தலைவரை பெரிதும் மதித்த கட்சி திமுக. அவரது வஞ்சகம் நிறைந்த தந்தி ரம் ஒவ்வொரு திமுகவினருக் கும் தெரியும். எதற்காக அவர் திமுகவை வெளியேற்றுவதி லேயே குறியாக இருந்தார் என்பதும் புரியும்.

திமுகவை தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதி என பேரவைத் தலைவர் தனபால் பொய்யான குற்றச்சாட்டைக் கூறினால் அதை ஒருபோதும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.

இவ்வாறு அறிக்கையில் வி.பி.துரைசாமி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in