Published : 04 Jan 2017 09:33 AM
Last Updated : 04 Jan 2017 09:33 AM

விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். உயி ரிழந்த விவசாயிகளின் குடும் பங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அர சியல் கட்சித் தலைவர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் வறட்சி காரண மாக விவசாயிகள் பெரும் பாதிப் புக்கு ஆளாகியுள்ளனர். பயிர் கள் கருகிய வேதனையில் பலர் தற்கொலை செய்து கொள் கின்றனர். அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் இந்த சோக சம்பவங்கள் தினமும் நடந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி, அதன் காரணமாக விவசாயிகளின் தற்கொலை, அதிர்ச்சி மரணங்கள் இவை அனைத்து தமிழக மக்களையும் பெரும் வேதனைக்குள்ளாக்கியது. தங்களது அனைத்து விதமான கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை. இதனால், கடும் வறட்சி, கடன் தொல்லை, பணத்தட்டுப்பாடு, வங்கிகளின் கெடுபிடி வசூல் காரணமாக விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண் டும். அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ.30 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், வாழைக்கு ரூ.1 லட்சம், மானாவாரிக்கு ரூ.20 ஆயிரம் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும்.

தி.க.தலைவர் கி.வீரமணி:

வறட்சி காரணமாக தமிழகத்தில் இதுவரை 84 விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை அலட் சியப்படுத்திவிட முடியாது. பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு போதிய அளவில் இழப்பீடு வழங்கி, விரக்தியில் இருந்து விவசாயி களைக் காப்பாற்ற வேண்டும். இதற்காக முதல்வர், அமைச்சர்கள் உடனடியாக களத்தில் இறங்கி தாமதிக்காமல் செயல்பட வேண் டியது தலையாய கடமையாகும். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கச் செய்து, மத்திய அரசின் உதவியை மாநில அரசு உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:

தமிழகத்தில் போதிய பருவமழை பொழியாததாலும், காவிரியில் நீர் திறக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட கர்நாடக அரசு திறக்காததாலும் தமிழகத்தில் பயிர்கள் கருகியுள்ளன.

இதனால் மனஉளைச்ச லுக்கு ஆளாகியுள்ள டெல்டா விவசாயிகள் மாரடைப்பு ஏற் பட்டும், தற்கொலை செய்தும் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் மரணத்தை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x