Published : 12 Jun 2016 02:32 PM
Last Updated : 12 Jun 2016 02:32 PM

புதுச்சேரி சபாநாயகர் ஆனார் வைத்திலிங்கம்: என்.ஆர்.காங்கிரஸ் புறக்கணிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 14-வது சட்டப்பேரவை நேற்று கூடியது. சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும், துணைத் தலைவராக சிவகொழுந்தும் பொறுப்பேற்றனர். முக்கிய எதிர்க்கட்சியான என். ஆர்.காங்கிரஸ் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தது.

புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. கடந்த 6-ம் தேதி முதல்வர் நாரா யணசாமி தலைமையில் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

தற்காலிக சட்டப்பேரவைத் தலை வராக சிவக்கொழுந்து எம்எல்ஏ நியமிக்கப்பட்டார். சட்டப் பேரவைத் தலைவர் பதவிக்கு முன்னாள் முதல்வர் வி.வைத்திலிங்கமும், துணைத் தலைவர் பதவிக்கு விபி.சிவக்கொழுந்தும் பேரவை செயலாளர் மோகன்தா ஸிடம் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் புதுச்சேரியின் 14- வது சட்டப்பேரவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் விபி. சிவக்கொழுந்து தலைமை தாங்கி பேரவையை தொடங்கி வைத்தார்.

பேரவைத்தலைவராக வைத்தி லிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டுள்ளதாக தற்காலிக தலைவர் சிவக்கொழுந்து அறி வித்து, தலைவர் இருக்கையில் அமரு மாறு வைத்திலிங்கத்துக்கு அழைப்பு விடுத்தார்.

முதல்வர் நாராயணசாமி, அதிமுக பேரவை குழுத் தலைவர் அன்பழகன், திமுக எம்எல்ஏ சிவா ஆகியோர் வைத்திலிங்கத்தை இருக்கையில் அமரவைத்து வாழ்த்து தெரி வித்தனர்.

பேரவை துணைத் தலைவராக சிவக்கொழுந்து தேர்வானதாக பேரவைத் தலைவர் வைத்திலிங் கம் அறிவித்தார். பேரவைத் தலைவர், முதல்வர், எம்எல்ஏக்கள் அன்பழகன், சிவா ஆகியோர் சிவக்கொழுந்தை அழைத்துச் சென்று துணைத் தலைவர் இருக் கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து முதல்வர் நாரா யணசாமியும், உறுப்பினர்களும் சட்டப்பேரவைத் தலைவரை வாழ்த்தி பேசினர். பிற்பகல் 1.22 மணி வரை நடைபெற்ற சட்டப்பே ரவையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அறிவித்தார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவ ரும் நேற்றைய சட்டப்பேரவை நிகழ்ச் சியை புறக்கணித்தனர்.

காலில் விழுந்த பெண் எம்எல்ஏ

நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி, சபாநாயகர் வைத்திலிங்கம் காலில் விழுந்து ஆசி பெற்றார். இவர் ஏற்கெனவே துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் காலில் விழுந்து வணங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x