

ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்று அதிமுக அவைத்தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கூவத்தூரில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பெரும்பாலான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்கள் பக்கமே இருக்கிறார்கள். ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியல் ஆளுநரிடம் கொடுத்து இருக்கிறோம். அதன் அடிப்படையில் விரைவில் ஆளுநர் தங்களை தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஆளுநர் அழைப்பார்'' என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.