

ஆந்திராவில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் கண்டனத்துக்கு உரியது. இது சம்பந்தமாக தமிழக அரசு, ஆந்திர மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சேலத்தில் நேற்று மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோ, பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:
காவிரி நீர் பிரச்சினையில் லட்சக் கணக்கான விவசாயிகள் பாதிக்கப் பட்டு, விவசாய நிலங்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கா மல் தொழில் வளம் குன்றி அவதிப் பட்டு வருகின்றனர். இதுசம்பந்த மாக தமிழக முதல்வர், கர்நாடக அரசிடம் பேச்சவார்த்தை நடத்த வேண்டும். ஆந்திர அரசு பாலாற் றில் தடுப்பணை கட்டி உள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு தமிழகம் - ஆந்திராவுக்கு இடையே பாலாறு தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதை மீறி ஆந்திர அரசு செயல்படுகிறது.
ஆந்திர போலீஸார் தொடர்ந்து தமிழர்களை கைது செய்து வருகின் றனர். இதற்கு முன் 20 தமிழர் கள் கொல்லப்பட்டுள்ளனர். தற் போது, 32 தமிழர்கள் கைது செய் யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் தொடர்ந்து தமிழர்கள் கைது செய் யப்படும் சம்பவம் கண்டனத்துக் குரியது. இதுபற்றி தமிழக அரசு, ஆந்திர மாநிலத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார்.