தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளிக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. பஸ் டிக்கெட் முன் பதிவு செய்ய 25 சிறப்பு கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.

வரும் 22-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். ரயில்களின் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், பெரும்பாலானோர் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வரும் 17 முதல் 21-ம் தேதி வரை மொத்தம் 9,088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, இன்று (அக்.17) 501 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல 18-ம் தேதி 501 சிறப்பு பஸ்களும், 19-ம் தேதி 699, 20-ம் தேதி 1,400, 21-ம் தேதி 1,652 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,753 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்கெனவே உள்ள 9 கவுன்ட்டர்கள் உட்பட மொத்தம் 25 சிறப்பு கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 2-ல் விழுப்புரம், காஞ்சிபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல 7, 8, 9 ஆகிய நடைமேடைகளில் நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் டிக்கெட் முன்பதிவு செய்யாத பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் நீண்ட தூரம் செல்லும் டிக்கெட் முன்பதிவு செய்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in