பவானி ஆற்றில் அணை கட்டும் விவகாரம்: கோவையில் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் - டி.ராஜேந்தர் அறிவிப்பு

பவானி ஆற்றில் அணை கட்டும் விவகாரம்: கோவையில் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் - டி.ராஜேந்தர் அறிவிப்பு
Updated on
1 min read

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை நிறுத்த தமிழக அரசு கொண்டுவந்துள்ள தீர்மானத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக டி.ராஜேந்தர் அறிவித் துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

திமுகவை அண்ணாவும், அதிமுகவை எம்.ஜி.ஆரும் எந்த லட்சியத்துக்காக தொடங்கினார் களோ, அந்த லட்சியம் கொஞ் சம் கொஞ்சமாக மாண்டுகொண்டி ருக்கிறது. மத்திய அரசின் பட் ஜெட்டை பார்த்தால் ஏன் தமிழ் நாட்டை புறக்கணிக்கிறார்கள் என்றே புரியவில்லை? கேரள அரசு முன்பு முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் ஈடுபட்டது. இப் போது பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்கிறது.

மறுபக்கம் ஆந்திர அரசு பாலாற் றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப் பணையில் மேலும் ஏழு அடியை உயர்த்திவிட்டது. கர்நாடக அரசோ காவிரியில் தண்ணீரை திறந்து விடமாட்டோம் என்கிறது. தமிழ்நாடு மட்டும் தத்தளித்துக்கொண்டிருக் கிறது. இங்கே மாறிமாறி ஆட்சியில் உள்ள இரண்டு திராவிட கட்சிகளை தூக்கிவிட்டு உருவாக்கியே காட்ட வேண்டும் ஒரு மாற்று அணி. அப்போதுதான் தமிழ்நாட்டை விட்டு விலகும் மூடுபனி.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு குறுக்கு வழியில் அணை கட்டுவதை நிறுத்த வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற கோரிக்கையோடு வரும் 9-ம் தேதி கோவை நகரில் இலட்சிய திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in