Published : 17 Jun 2016 07:28 AM
Last Updated : 17 Jun 2016 07:28 AM

விவசாய விளைபொருட்களுக்கு மின்னணு ஏல முறை

ஆளுநர் உரையில் தெரிவித் திருப்பதாவது:

விவசாயிகளை மையமாகக் கொண்ட அணுகுமுறை மூலம் புதுமையான பல திட்டங்களைச் செயல்படுத்தி, இந்த அரசு வேளாண் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடும். நவீன தொழில்நுட்பங்கள், பயிர் பலவகை யாக்கல் முறையை விரிவாக்கம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள் மற்றும் பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படும்.

இத் தொழில்நுட்பங்களின் மூலம் தொடர்ந்து வேளாண் உற்பத்தி உயரவும், விவசாயிகளின் வருவாய் பெருகவும் வழிவகை செய்யப் படும். பண்ணை இயந்திரமயமாக்கல் திட்டம், நுண்ணீர்ப் பாசனத் திட்டங்கள் போன்ற இந்த அரசால் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலையை விவசாயிகள் பெறு வதற்கு, சந்தைகளுடனான இணைப்பை ஒருங்கிணைத்து செம்மைப்படுத்த, கூட்டுறவு வேளாண் சந்தைகளையும் ஒழுங்கு முறை விற்பனை மையங்களையும் ஒருங்கிணைத்து கணினிமயமாக்கி, மின்னணு ஏல முறையைப் பயன் படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம் தமிழ்நாட் டில் உள்ள சந்தைகள் தேசிய அள வில் உள்ள வேளாண் விளை பொருட்களுக்கான சந்தைகளுடன் இணைக்கப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறை யின் மேம்பாட்டுக்கு இந்த அரசு தொடர்ந்து பெரும் முக்கியத்துவம் அளிக்கும். புதிய கால்நடை துணை மையங்கள் அமைத்தல், கால்நடை துணை மையங்களை மருந்தகங் களாகத் தரம் உயர்த்துதல் போன்ற கால்நடை பராமரிப்புத் துறைக் கான கட்டமைப்பு வசதிகள் தேவைக்கேற்ப வலுப்படுத்தப் படும். கிராமங்களில் உள்ள ஏழை மகளிரின் வாழ்க்கைத் தரத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத் திய விலையில்லா கறவைப் பசுக் கள், செம்மறி ஆடுகள், வெள்ளாடு கள் வழங்கும் முன்னோடித் திட்டங்கள் இந்த அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கால்நடை பராமரிப்புத் துறையில் சீரான, நீடித்த, நிலைத்த வளர்ச்சியை எய்த, பால்வளத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x