கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்கவேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
காவிரி பிரச்சினைக்காக கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டதும், அவர்களது உடைமைகள் சேதப்படுத்தப்பட்டதும் உலகெங் கும் உள்ள தமிழர்களை அதிர்ச்சி யும், வேதனையும் அடைய வைத் துள்ளது. அங்கு கேபிஎன் பேருந்துகள் எரிக்கப்பட்டுள்ளன. அடையாறு ஆனந்தபவன் உள் ளிட்ட ஹோட்டல்கள் தாக்கப்பட்டுள் ளன. கலவரத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இனி இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடக் காமல் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில மொழி வெறியர்கள் தாக்கியதற்காக ஒட்டுமொத்த மக்களையும் குறைகூறக் கூடாது. அதே நேரம், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாதது. இதற்காக தமிழகத்தில் வணிகர் சங்கங்கள் 16-ம் தேதி (இன்று) முழு அடைப்பு போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் அறிவித்துள்ளதை ஏற்க முடியாது.
தமிழகத்தில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைதியாக இருக்க வேண்டும். எந்த வகையிலும் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது. காவிரி பிரச்சினையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
