

ஆம்னி பேருந்துகளில் அதிக கட் டணம் வசூலித்தால் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரும் 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) போகி, ஜனவரி 14-ம் தேதி (சனிக்கிழமை) பொங்கல், ஜனவரி 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாட்டுப் பொங்கல், ஜனவரி 16-ம் தேதி (திங்கட்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மக்களின் வசதிக்காக இந்த ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மொத் தம் 11,270 பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இது தவிர, மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களில் இருந்தும் 6,423 சிறப்புப் பேருந்துகள் இயக் கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 17,693 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் 26 சிறப்பு கவுன்ட்டர்களை நேற்று தொடங்கிவைத்தார். இதில், மூத்த குடிமக்களுக்கு 1, பெண் களுக்கு-2, மாற்றுத்திறனாளி களுக்கு-2 கவுன்ட்டர்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. இதேபோல், தாம்பரம் (மெப்ஸ்) பேருந்து நிலையத்தில் 2, பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு கவுன்ட்டரும் நேற்று தொடங்கப்பட்டன. மேற்கண்ட சிறப்பு கவுன்ட்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24794709 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.
போக்குவரத்துத் துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர் களிடம் கூறியதாவது:
வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 300 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மொத்தம் 29 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்கான சிறப்புப் பேருந்துகளில் பொதுமக்கள் சிரம மின்றி பயணம் மேற்கொள்ள ஏது வாக, கனரக வாகனங்கள் வரத் தினை பீக் ஹவர்களில் நிறுத்தி வைக் கவும், சுங்கச்சாவடிகளில் சிறப்பு வழித்தடங்களை ஒதுக்கி தடை யின்றி போக்குவரத்து நடைபெற வும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. பொங்கல் பண் டிகை முடிந்த பிறகும் 15, 16, 17-ம் தேதி போதிய அளவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆனந்தபத்ம நாபன், மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் வீ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
மாணவி புகாரால் திடீர் பரபரப்பு
சிறப்புப் பேருந்துகள் இயக்கம், கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு தொடர் பாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துக்கொண்டு இருக்கும் போது, பெங்களூருவைச் சேர்ந்த பெண் பயணி அன்னபூர்ணா என் பவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீஸார் சிலர் தம்மை விசா ரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புகார் அளித்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டு இருந்தபோது, போலீஸார் சிலர் வந்து இங்கெல்லாம் தூங்கக் கூடாது என மிரட்டினர். நான் ஒரு ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறேன். என்னை துன்புறுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். பெண் பயணியின் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை
அன்னபூர்ணாவின் புகாரில், ‘போலீஸார் தன்னிடம் தரக்குறைவாக பேசியதாகவும், அது குறித்து கேட்ட என்னை பிடித்து தள்ளியதாகவும்’ கூறியிருந்தார். புகாரின்பேரில் கூடுதல் ஆணையர் சி.தர் நேரடி விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து, கோயம்பேடு காவல் நிலைய ஏட்டு குப்புசாமி, காவலர் ராஜபாண்டி ஆகியோரை கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் முடிவில் போலீஸார் தவறு செய்திருப்பது தெரிந்தால் அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீஸார் சிலர் துன்புறுத்தியதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் புகார் தெரிவிக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பயணி அன்னபூர்ணா. |