Published : 30 Aug 2016 09:42 AM
Last Updated : 30 Aug 2016 09:42 AM

ரூ.15 கோடி செலவில் சர்வதேச ஓட்டுநர் பயிற்சி மையம்: கும்மிடிப்பூண்டியில் விரைவில் திறப்பு

கும்மிடிப்பூண்டியில் சர்வதேச ஓட்டுநர் பயிற்சி மையம் விரைவில் திறக்கப்படும் என போக்கு வரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

கடந்த 2011 முதல் 2016 வரை புதிதாக 74 பணிமனைகள் அமைக்க ஆணையிடப்பட்டு, அவற்றில் 36 பணிமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஏழை எளிய மக்களின் நலன் கருதி குறைந்த பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி மையம், ரூ.15 கோடி செலவில் சர்வதேச பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. விரைவில் இந்த மையத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னையில் இயக்கப்படும் 200 சிறிய பேருந்துகள் மூலம் கடந்த மார்ச் வரை ரூ.45 கோடியே 89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. போக்குவரத்துக் கழகங்களையும் பொது மக்களையும் காக்கும் வகையில் 2012 முதல் 2016 வரை ரூ.1,556.72 கோடியை டீசல் மானியத் தொகையாக தமிழக அரசு வழங்கியுள்ளது.

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றை வழங்க ஆவண செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x