

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற 7 பேரின் விடு தலை குறித்த தீர்ப்பில், அரசியல் அழுத்தங்களுக்கு பணிந்தால் நீதித்துறை மீது மக்களின் நம்பிக்கை போய்விடும் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன்.
தஞ்சையில் வெள்ளிக்கிழமை அவர் நிரூபர்களிடம் பேசியதாவது: 7 பேரின் விடுதலை குறித்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதியும் அமர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங் கிய பின்னர், தற்போது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர் வுக்கு மாற்றி இருப்பது ஏமாற் றத்தை அளிக்கிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார் பில் போடப்பட்ட 2 மனுவில் ஒரு மனுவுக்கு தீர்ப்பு கூறிவிட்டனர். அடுத்த மனுவுக்கு தீர்ப்பு கூறு வதற்கு பதில் அதை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது என்று எடுத்த முடிவு, அரசியல் அழுத்தம் காரணமாக எடுக்கப் பட்ட முடிவாகக் கருத வேண்டி யுள்ளது.
அரசியல் அழுத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் பணியுமானால், நீதித்துறை மீது மக்கள் வைத் துள்ள நம்பிக்கை போய்விடும். இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு சரியானதல்ல என்றார் நெடுமாறன்.