

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்ப தாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. ஓரிரு இடங்களில் மட்டுமே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை. அதிகபட்ச வெப்பநிலையாக 96.8 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலையாக 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் இருக்கும்.
தமிழகத்தை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக தொண்டியில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட், சென்னையில் 96.98 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மழையை பொருத்தவரை வால்பாறையில் 21.2 மி.மீ. பதிவாகியுள்ளது.