

முனு ஆதியின் 90-வது பிறந்த நாள் நிகழ்ச்சி
தமிழக சட்டப்பேரவையின் மரபுகள் காக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் முனுஆதியின் 90-வது பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமை தாங்கினர்.
இதில், தி.மு.க பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மலரை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சட்டப் பேரவையின் தலைவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு அடையாளமாக முனுஆதி திகழ்ந்தார். முன்பெல்லாம் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சபாநாயகர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பார்கள். தற்போது அந்த நிலையில்லை.
அவைக்கு சபாநாயகர் வரும்போது முத லமைச்சர் உள் ளிட்ட அனை வரும் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என் பது சட்டப் பேர வையின் மரபு. எதிர்க்கட்சிக்கு பேரவையில் அதிக நேரம் பேச வாய்ப்பு இருந்தது. தற்போது ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே அதிகம் பேசுகிறார்கள். புகழ்பாடும் பேரவையாகவே மாறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்க ளவையிலும் மக்கள் பிரச்சினைக்கு பதில் புகழைப் பாடும் நிலையுள்ளது. அன்று இருந்ததைப் போலவே, இன்றும் பேரவையின் மரபுகள் காக்கப்பட வேண்டும். மறைந்த முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் முனுஆதி, பேரவையை எப்படி நடத்தி இருக்கின்றார் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது அப் படி ஒரு காலம் தமிழகத்துக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது. அந்த வாய்ப்பை அனைவரும் ஏற்படுத்தி தரவேண்டும் என்று அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், திராவி டர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி, திமுக எம்.எல்.ஏக்கள் தா.மோ.அன் பரசன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணா நிதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மீ.அ.வைத்தியலிங்கம், மலர் வெளியிட்டு குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். கலை இலக்கிய பிரிவு மாவட்ட செயலாளரும் முனுஆதியின் மகனு மான ஆதிமாறன் நன்றி கூறினார்.