குறைந்த செலவில் ராக்கெட்டை செலுத்த உதவும் ‘ஸ்கிராம்ஜெட் இன்ஜின்’: இன்று சோதனை செய்கிறது இஸ்ரோ

குறைந்த செலவில் ராக்கெட்டை செலுத்த உதவும் ‘ஸ்கிராம்ஜெட் இன்ஜின்’: இன்று சோதனை செய்கிறது இஸ்ரோ
Updated on
1 min read

குறைந்த செலவில் ராக்கெட்டை செலுத்த உதவும் ‘ஸ்கிராம்ஜெட் இன்ஜினை’ (Scramjet engine) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (இஸ்ரோ) இன்று விண் ணில் செலுத்தி சோதனை செய் கிறது.

ஏற்கெனவே கிரையோஜெனிக் என்ஜினை பயன்படுத்தி பல ராக் கெட்டுகளை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ள இஸ்ரோ, அடுத்தகட்டமாக `ஸ்கிராம்ஜெட் இன்ஜின்’ மூலம் ராக்கெட் செலுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஸ்கிராம்ஜெட் என்ஜின்

பொதுவாக ராக்கெட்டுகளை செலுத்தும்போது அவற்றின் எரி பொருளை எரிப்பதற்கு தேவை யான ஆக்சிஜன் கொள்கலனை யும் ராக்கெட் சுமந்து செல்ல வேண்டியுள்ளது.

அவ்வாறு ஆக்சிஜனையும் சுமந்து செல்வதால் புவியின் வளிமண்டலத்தைத் தாண் டியும் ராக்கெட்டால் பயணிக்க முடியும்.

ஆனால் ஆக்சிஜன் கொள் கலத்தையும் சுமந்து செல்வதால் ராக்கெட்டின் எடை அதிகரிக்கிறது. மாறாக, வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனையே எரிபொருளை எரிக்கப் பயன்படுத்தினால் ஆக்சி ஜன் கொள்கலனை எடுத்துச் செல் லும் தேவை இருக்காது.

இந்த நோக்கத்துக்காகவே வளிமண்டல ஆக்சிஜனை உறிஞ்சி எரி பொருளை எரிக்கும் தொழில் நுட்பம் ஸ்கிராம்ஜெட் இன்ஜின் களில் பயன்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே அமெரிக்காவின் நாசா உள்பட பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு அமைப்புகள் இந்த ஸ்கிராம்ஜெட் என்ஜின் கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் இஸ்ரோ அமைப்பும் ஸ்கிராம்ஜெட் என்ஜினை உருவாக்கியுள்ளது. இந்த ஸ்கிராம்ஜெட் இன்ஜினை ஆர்ஹெச்-560 என்ற ராக்கெட்டில் பொருத்தி இஸ்ரோ இன்று சோதனை செய்கிறது. ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று காலை இந்த இன்ஜின் விண்ணில் ஏவி சோதித்து பார்க்கப்படுகிறது.

இந்த சோதனை முயற்சியில் ராக்கெட் ஆனது வளிமண்டலத்தில் 70 கி.மீ தூரம் செலுத்தப்பட உள்ளது.

இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் ராக்கெட் ஏவும் செலவு குறையும். மேலும் ஆக் சிஜன் கொள்கலன் இல்லாததால் ராக்கெட்டின் எடையும் குறையும். இதனால் அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை இத்தகைய ராக்கெட்டுகளின் மூலம் செலுத்த இயலும்.

இது தவிர இந்தச் சோதனை யானது 'ரீ யூசபிள் லாஞ்சிங் வெஹிகிள் (RLV)’ எனப்படும் மறு பயன்பாட்டு விண்கலம் உரு வாக்கத்துக்கும் பெரும் உதவியாக இருக்கும் என இஸ்ரோ விஞ் ஞானிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in