Published : 18 Jun 2017 09:46 AM
Last Updated : 18 Jun 2017 09:46 AM

6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

நாட்டிலேயே முதல்முறையாக 6 மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான் சானியாவின் ஜன்ஜிபார் பகுதி யைச் சேர்ந்த 6 மாதக் குழந்தை அமீத். பிறவிலேயே பித்தக் குழாய் கள் இல்லாததால், பிறந்த 15-வது நாளிலேயே மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் குழந்தை பாதிக்கப்பட்டது. பல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சரியாக வில்லை. 4-வது மாதத்தில் கல்லீரல் பாதிக்கப்பட்டதால் குழந்தை கவலைக்கிடமான நிலைக்குச் சென்றது.

இந்நிலையில், சென்னை மணப் பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவ மனையில் குழந்தையை கடந்த மாதம் சேர்த்தனர். அப்போது குழந்தை 6 கிலோ எடை இருந்தது. மருத்துவர்கள் பல்வேறு பரி சோதனைகளை செய்து பார்த்து விட்டு, குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர். குழந்தையின் தாய் தனது கல்லீரலை தானமாக கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து, கல்லீரல், கணை யம், பித்தநாளம் மற்றும் திட உறுப்பு கள் அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்றம் துறை இயக்குநர் ஆர்.சுரேந்திரன் தலைமையில் பாரி விஜயராகவன், வி.விமல்ராஜ், எம்.ராகவன், பார்த்திபன், ஆசிஷ் பங்காரி, சர்வ வினோதினி, செந்தில் குமார் ஆகியோர் கொண்ட மருத் துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் தாயின் இடதுபக்கத்தில் இருந்து 350 கிராம் அளவுக்கு மட்டும் கல்லீரலை வெட்டி எடுத் தனர். ரத்தக் குழாய்கள், பித்தக் குழாய்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத அளவுக்கு அதை 240 கிராம் அளவுக்கு சிறிதாக்கினர்.

தாயிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலை அறுவை சிகிச்சை மூலம் குழந்தைக்கு வெற்றிகரமாகப் பொருத்தி ரத்தக் குழாய்கள், பித்தக் குழாய்களை முறையாக இணைத்தனர். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமாக இருக்கிறது. கல்லீரலை தானம் செய்த தாயும் நலமாக இருக்கிறார். 2 மாதத்தில் குழந்தைக்கும், தாய்க்கும் கல்லீரல் முழு வளர்ச்சி அடைந்துவிடும். 6 கிலோ எடையுள்ள 6 மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்று மருத்துவர்கள் கூறினர்.

செஷல்ஸ் குழந்தை

செஷல்ஸ் நாட்டை சேர்ந்த 2 வயது குழந்தை கிரேஸ். பிறவி லேயே பித்தக் குழாய் இல்லாததால் இதுவும் மஞ்சள்காமாலை உள் ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட் டது. இலங்கை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தைத் தொடர்ந்து, சில மாதங் களுக்கு குழந்தை நலமுடன் இருந் தது. பிறகு, கல்லீரல் பாதிக்கப்பட்ட தால், சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சேர்த் தனர்.

தாயிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரல் எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தைக்குப் பொருத்தப்பட்டது. இந்தக் குழந் தையும் தாயும் தற்போது நலமாக உள்ளனர். செஷல்ஸ் நாட்டைப் பொருத்தவரை, இதுதான் முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 குழந்தைகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகளையும் அந்தந்த நாட்டு அரசுகளே ஏற்றுக்கொண்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x