எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட தகுதித் தேர்வு: மத்திய சட்டத் துறை பரிசீலனை

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட தகுதித் தேர்வு: மத்திய சட்டத் துறை பரிசீலனை
Updated on
1 min read

எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவோருக்கு தகுதித் தேர்வு நடத்தும் கோரிக்கை மனு மத்திய சட்டத் துறையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாரதியார் சிந்தனையாளர்கள் மன்றத்தின் பொதுச் செயலர் லெட்சுமிநாராயணன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு கோரிக்கை மனு அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிடுவோருக்கு தகுதித் தேர்வு நடத்த வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் குடியரசுத் தலைவர், ஆளுநர், சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இதற்காக தகுதித் தேர்வு நடத்த வேண்டும். இதில் 35 மதிப்பெண்கள் பெறுவோரை எம்.எல்.ஏ. தேர்தலிலும், 40 மதிப்பெண்கள் பெறுவோரை எம்.பி. தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இக்கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. தகுதித் தேர்வு நடத்த தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வராது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து இந்த கோரிக்கை தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு லெட்சுமிநாராயணன் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு மத்திய பொது தகவல் அலுவலர் மற்றும் கூடுதல் சட்டத்துறை செயலர் ஏ.கே.உபாத்யா பதில் அளித்துள்ளார். அதில், மத்திய சட்ட ஆணை யத்துக்கு அனுப்பிய தங்கள் கோரிக்கை மனு உரிய நடவடிக்கைக்காக சட்டத்துறை சட்டப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in