

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு மற்றும் ரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இதனால், ஒட்டு மொத்த காவிரி டெல்டாவும் முப்போகம் சாகுபடியை இழந்துள்ளது.
காவிரியில் நமது உரிமையை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நீராதாரங்களில் தமிழக உரிமைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழு கடை அடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டம் அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற உள்ளது.
இதற்கு அனைத்து தொழிலாளர் சங்கங்கள், கட்சிகளும் ஆதரவளித் துள்ளன. அதிமுகவும் ஆதர வளிக்க வேண்டும். மேலும், சட்ட நடவடிக்கை மட்டும் அல்லாமல் வேறு வழி மூலமும் காவிரி நீரை பெற்றுத் தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக அற வழியில் நடைபெற உள்ள போராட் டத்துக்கு தமிழக அரசு பஸ் போக்குவரத்தை நிறுத்தி முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
மேலும், தமிழக சட்டப்பேர வையில் காவிரி நீரை பெற்றுத் தருவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி போராட்டத்தில் பங்கேற்கும் வகையில் சட்டமன்றத் துக்கு ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும். முதல்வர் தலைமை யில் அனைத்துக் கட்சி தலை வர்கள் தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள், விவசாய சங்க தலை வர்கள் உள்ளடக்கிய குழு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தண்ணீரை பெற்றுத்தர வேண்டும்.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், பல்லாவரம், தாம்பரம் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ரயில் மறியல், 1000 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பொது மக்கள் என லட்சக் கணக்கானோர் பங்கேற்க உள்ள னர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது உரிமையை மீட்டெடுக்க அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்” என்றார்.
விவசாய சங்கங்களின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரி வித்துள்ளன. போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று லாரிகளை இயக்க மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.