

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கட்சித் தொண்டர்களை வரும் 23-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக சந்திக்க உள்ளார்.
2009-க்குப் பிறகு மதிமுகவினர் தேர்தல் அரசியலில் வெற்றி பெற வில்லை. 2011 சட்டப்பேரவைத் தேர்தலை மதிமுக புறக்கணித் தது. இதேபோல், 2014 மக் களவைத் தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வியடைந்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலி லும் மதிமுக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். தொடர் தோல்விகளால் உற்சாகமின்றி இருக்கும் மதிமுக தொண்டர்களை ஊக்கப்படுத்த 23-ம் தேதி முதல் மாவட்டவாரியாக வைகோ சுற்றுப்பயணம் செய்கிறார்.
மதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தேர்தல் நேரத்தில் கடந்த 3 மாத காலமாக மதிமுக தொண்டர்கள் கடும் உழைப்பை தந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் மதிமுகவினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. தேர்தல் தோல்வியிலிருந்து வைகோ மீண்டு வருகிறார்’’ என்றார்.