இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு

இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு
Updated on
1 min read

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வை எழுத குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணி களுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்ப கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மேற்கண்ட பணிகளில் 4,931 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்டோபர் 16-ம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் 3-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ள வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதை மனதில்கொண்டு தமிழகம் முழுவதும் ஏராளமான தேர்வர்கள் குரூப்-4 தேர்வுக்கு இரவு பகலாக படித்து வருகிறார்கள். தனியார் பயிற்சி மையங்களிலும் குரூப்-4 தேர்வுக்கான வகுப்புகள் மும்முரமாக நடைபெற்று வரு கின்றன.

சிறை அலுவலர் பதவி

குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அக் டோபர் மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்படும். இதற்கான அறி விப்பு இன்னும் ஒரு மாதத்தில் (ஜூலை) வெளியிடப்படும். மேலும், சிறைத்துறை அலுவலர் (ஜெயிலர்), தொழிலாளர் அலுவலர், சுற்றுலா அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in