Published : 13 Sep 2016 08:22 AM
Last Updated : 13 Sep 2016 08:22 AM

ஏ.சி.முத்தையாவின் மனைவி தேவகி முத்தையாவுக்கு ‘பக்தி இலக்கியத் திலகம்’ பட்டம்: தருமபுரம் ஆதீனம் வழங்கியது

ஸ்பிக் நிறுவனங்களின் தலைவர் ஏ.சி.முத்தையாவின் மனைவி தேவகி முத்தையாவுக்கு தருமபுரம் ஆதீன மடம் ‘பக்தி இலக்கியத் திலகம்’ என்ற பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

தருமபுரம் ஆதீன மடத்தில் ஆவணி மூலப் பெருவிழா மற்றும் ஆதீனக் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை நடந்தது. இதில், ஸ்பிக் நிறுவனங்களின் தலைவர் ஏ.சி.முத்தையாவின் மனைவி தேவகி முத்தையாவுக்கு ‘பக்தி இலக்கியத் திலகம்’ என்ற பட்டத்தை தருமை ஆதீனம் ல சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழங்கினார்.

தேவகி முத்தையா 29 ஆண்டுகளுக்கு முன்பு, தருமபுரம் ஆதீன மடத்தின் வழிகாட்டுதலுடன் ‘அபிராமி அந்தாதி’ குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதினார். காரைக்கால் அம்மையார் குறித்தும் ஆய்வுக் கட்டுரை எழுதும்படி அப்போதே தருமபுரம் ஆதீனம் கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, ‘காரைக்கால் அம்மையார் வாழ்வும் அவர்தம் படைப்புகளும்’ என்ற தலைப்பில் தேவகி முத்தையா ஆய்வுக் கட்டுரை எழுதி, சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

இந்நிலையில், அவரது தொடர் ஆன்மிக சேவையை அங்கீகரிக்கும் விதமாக ‘பக்தி இலக்கியத் திலகம்’ என்ற பட்டம் வழங்கி தருமபுர ஆதீனம் கவுரவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x