ஜெயலலிதா மனு இன்று விசாரணை: தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் போலீஸார்

ஜெயலலிதா மனு இன்று விசாரணை: தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் போலீஸார்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் ஒருவேளை ஜெயலலிதாவுக்கு சாதகமான முடிவு கிடைக்காதபட்சத்தில், தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில் இருக்குமாறு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப் பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து சாலைகளிலும் இன்று கூடுதல் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்

டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் வாய்மொழியா கவே உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டபோது தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in