Published : 14 Jul 2016 10:40 AM
Last Updated : 14 Jul 2016 10:40 AM

2016-17ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் 21-ல் தாக்கல்: திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் 2016-17ம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை வரும் 21-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் முக்கிய திட்டங்கள், சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் 14-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் கடந்த மே 22-ம் தேதியுடன் முடிந்தது. முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலை தமிழகம் எதிர்நோக்கியிருந்ததால், முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. 6 மாத செலவுகள் மற்றும் திட்ட செலவுகளுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் பிப்ரவரி 16-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் மே 16-ம் தேதி நடத்தப்பட்டது. இதில், அதிமுக தொடர்ச்சியாக 2-வது முறை வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 6-வது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23-ம் தேதி பதவியேற்றார். பின்னர், 15-வது சட்டப்பேரவையின் புதிய உறுப்பி னர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட னர். பேரவைத் தலைவராக பி.தனபால், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டனர்.

ஆளுநர் உரையுடன் முதல் கூட்டம்

அதன்பின், 15-வது சட்டப்பேரவை யின் முதல் கூட்டம் ஆளுநர் கே.ரோசய்யாவின் உரையுடன் ஜூன் 16-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடர்ந்து 4 நாட்கள் நடந்தது. ஜூன் 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் பதிலு ரையுடன், தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப் பட்டது.

முதல்வர் தனது பதிலுரையில், மெட்ரோ ரத்த வங்கி உள்ளிட்ட சில புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும், 110 விதியின் கீழ், தருமபுரியில் செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்கும்போது உயிரிழந்த தலைமைக்காவலர் குடும் பத்துக்கு ரூ.1 கோடி உதவித் தொகை உள்ளிட்ட அறிவிப் புகளையும் வெளியிட்டார்.

3 திருத்தங்கள்

இது தவிர, அக்கூட்டத் தொடரின்போது, மாநகராட்சி மேயரை நேரடி யாக மக்கள் தேர்வு செய்யாமல், கவுன்சிலர்களே தேர்வு செய்வதற்கான சட்டத்திருத் தம், நகராட்சிகள் சட்டத்தில் 2 திருத் தங்கள் உள்ளிட்ட 3 திருத்தங்கள் தொடர்பான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தேர்தலுக்கு முன்பு இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதால், 2016-17ம் நிதியாண் டுக்கான முழுமையான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய வேண்டி யுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலர் அ.மு.பி. ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு சட்டப்பேரவை யின் அடுத்த கூட்டத்தை ஜூலை 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். அன்று காலை 11 மணிக்கு 2016-17ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை பேர வைக்கு அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் 21-ம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இதில், பொதுமக்கள், மாணவர்களுக்கான இலவச திட்டங்கள், பொதுவிநியோக திட்டத் தில் ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட வற்றுக்கான முழுமையான நிதி ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும், தலைவர் தனபால் தலை மையில் பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூடும். நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகியவற்றை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக் கப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

அதிமுக தேர்தல் அறிக் கையில் கூறப்பட்ட இலவச ஸ்மார்ட்போன் திட்டம், இருசக்கர வாகனம் வாங்க பெண்களுக்கு 50 சதவீத மானியம் போன்ற திட் டங்கள் குறித்த அறிவிப்பு களை முதல்வர் ஜெய லலிதா வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது.

கடந்த முறை போல இல்லாமல், திமுக இம்முறை 89 உறுப்பினர்களைப் பெற்று, பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது. 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவும் திமுகவுக்கு உள்ளது. இதனால், டாஸ்மாக் மூடல், சட்டம் - ஒழுங்கு நிலவரம், பாலாற்றின் குறுக்கே தடுப் பணை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x