

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ் தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரிக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முன்பாக எருசலேம் நகர மக்கள் அவரை ஒரு கழுதையில் உட்கார வைத்து ‘தாவீதின் மகனுக்கு ஓசானா’என்று பாடியவாறு பவனியாக நகருக்குள் அழைத்துச் சென்றதாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணம் கிறிஸ்தவர்கள் குருத்து ஞாயிற்றை அனுசரிக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப் படுகிறது. அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான நேற்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக் கப்பட்டது. இதையொட்டி, தேவா லயங்களில் நேற்று காலை குருத்தோலை பவனியும், திருப் பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
சென்னையில் சாந்தோம் திருத்தலம், மயிலாப்பூர் லஸ் சர்ச், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், ராயப் பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், புதுப்பேட்டை அந் தோணியார் ஆலயம், அமைந்த கரை வின்சென்ட் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களில் நடந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலையை ஏந்திப் பிடித்தவாறு “ஓசானா தாவீதின் புதல்வா, ஓசானா, ஓசானா…” என்ற பாடலை பாடிச் சென்றனர்.
மேலும், ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல், சாந்தோம் செயின்ட் தாமஸ் ஆலயம், அடையாறு இயேசு அன்பர் ஆலயம், மயிலாப்பூர் நல்மேய்ப்பர் ஆலயம், மந்தைவெளி புனித லூக்கா ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், வேப்பேரி அந்தி ரேயா ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் குருத்தோலை பவனியும், சிறப்பு ஆராத னைகளும் நடைபெற்றன.
சென்னை புறநகர் பகுதி களிலும் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், மறைமலைநகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் குருத் தோலை பவனியிலும், சிறப்பு திருப்பலியிலும் ஏராளமான கிறிஸ் தவர்கள் கலந்துகொண்டனர்.