

“சிவன் - பார்வதியிடம் ஞானப்பழம் பெற்ற விநாயகரைப்போல் முதல்வர் பதவியை பழனிசாமி பெற்றுள்ளார். விநாயகரை சனி பகவானால்கூட பிடிக்க முடியாது. அதுபோல முதல்வரையும் யாரும் பிடிக்கவோ, மாற்றவோ முடியாது” என பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி வித்தார்.
முதல்வர் பழனிசாமி கடந்த 1973-ம் ஆண்டு விலங்கியல் பட்டப் படிப்பு படித்த ஈரோடு வாசவி கல்லூரியில் நேற்று பொன்விழா நடந்தது. விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
விழாவில் பள்ளிக்கல் வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பேசும்போது, “முதல்வர் மாறி விடுவார் என்று சிலர் நினைத்தனர். ஆனால், சிவன்- பார்வதியை சுற்றி வந்து ஞானப்பழம் பெற்ற விநாயகரைப் போல் முதல்வர் பதவியில் பழனி சாமி அமர்ந்துள்ளார். விநாயகரை சனி பகவானால்கூட பிடிக்க முடி யாது. அதுபோல தமிழக முதல் வரையும் யாராலும் பிடிக்க முடி யாது, மாற்றவும் முடியாது” என் றார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசும்போது, ‘‘தமிழ கத்தில் கடந்த 6 ஆண்டு களில் 70 கல்லூரிகள் தொடங்கப் பட்டுள்ளன. 18 வயது முதல் 23 வயதுவரையிலான ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சராசரியாக 27 கல்லூரிகள்தான் நாட்டில் உள்ளன. ஆனால், தமிழகத்தில் 37 கல்லூரிகள் உள்ளன என்ற உயர்ந்த நிலையை அடைந்துள்ளோம்’’ என்றார்.
மின் துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது, ‘‘இந்த அரசு செயல்படவில்லை என்று சிலர் கூறுகின்றனர். கடந்த 70 நாட்களில் 1500 கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். 70 நாட்களில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.