

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் கட்சியின் பொறுப்பை அவர் கவனிப்பார்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் சந்தித்தார்.
அப்போது, நாராயணசாமியை வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பொறுப்புகளை கவனிக்கும் வகையில் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமித்துள்ளதாகவும், அந்த மாநிலங்களில் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கு மாறும் சோனியா தெரிவித்தார்.
இதையடுத்து, அகில இந்திய பொதுச் செயலாளராக நாராயணசாமி நியமிக்கப்பட்டதற் கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
எனவே, வரும் 20-ம் தேதி அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கிறார்.