கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் தனியார் பள்ளி தீ விபத்து: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப் பட வேண்டிய இழப்பீடு பற்றி ஆராய்வதற்காக ஒரு நபர் விசா ரணை ஆணையம் அமைக்கப்பட் டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி யில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பள்ளி மாணவ மாணவிகள் 94 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 பேருக்குக் கடுமையானத் தீக்காயங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் இந்தத் தீ விபத் தினால் பாதிக்கப்பட்டோருக்கான சங்கத்தின் செயலாளர் கே.இன்ப ராஜ் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் தீக்காயம் அடைந்த குழந்தை களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப் பட வேண்டும். இது பற்றி ஆராய் வதற்காக ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண் டும் என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சண்முகம் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 19.10.2012 அன்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்யப் பட்டது.

இந்த வழக்கு குறித்து நீதிபதி கள் என். பால் வசந்தகுமார், எம். சத்யநாராயணன்ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப் போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக் கறிஞர் ஏ.எல். சோமையாஜி, “இதேபோன்ற ஒருமனு ஏற்க னவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலை யில் அதே கோரிக்கைக்காக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட மனு விசாரணைக்கே உகந் தது அல்ல” என்று வாதிட்டார்.

அப்போது மனுதாரரின் தரப் பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தமிழரசன் “ உச்ச நீதிமன்றம் தள்ளு படி செய்தாலும், மனுவின் தகுதி யின் அடிப்படையில் ஆராய்ந்து தள்ளுபடி செய்யப்படவில்லை” என்று வாதம் செய்தார்.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், கும்ப கோணம் தீ விபத்தால்பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்கு வது பற்றி ஆராய ஓய்வுபெற்ற நீதிபதிபி.சண்முகம் தலைமை யில் ஒரு நபர் விசாரணை ஆணை யம் அமைத்து தனி நீதிபதி பிறப் பித்த உத்தரவு செல்லும் என்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித் தனர். இந்த விசாரணை ஆணை யம் 4 மாதங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மீண்டும் இந்த வழக்கு செப்டம்பர் 15-ம் தேதிவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in