

தாய், தாய்மொழி, தாய்நாடு இந்த மூன்றையும் இளைஞர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஜீயர் கல்வி அறக்கட்டளை சார் பில் ராமானுஜரின் 1000-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி சமத்து வத்துக்கான நடைபயணம் சென் னையில் நேற்று நடைபெற்றது. தியாகராய நகர் திருமலை திருப் பதி தேவஸ்தானத்திலிருந்து தொடங்கிய இந்த நடைபயணத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப் புத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடைபயணத்தில் சுமார் 2000-த்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வெங்கய்ய நாயுடு பேசுகையில், “கடவுள் நம் அனை வரையும் சமமாகத்தான் படைத்துள் ளார். நமது வேதங்களும், புராணங் களும் சமதர்மத்தைப் பற்றி பேசு கின்றன. எனவே, நாம் தர்மத்தை பின்பற்ற வேண்டும். சமத்துவத்துக் காக பாடுபடுவதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும். மேலும், தாய், தாய்நாடு, தாய் மொழி ஆகிய மூன்றையும் நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என் பதை இளைய தலைமுறையின ருக்கு கற்றுத்தர வேண்டும்”
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இன்போ சிஸ் நிறுவனத்தின் தலைவர் சேஷா சாயி, ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.