Published : 23 Sep 2016 09:01 AM
Last Updated : 23 Sep 2016 09:01 AM

ரூ.4 கோடியுடன் கார் கடத்தல் விவகாரம்: கொள்ளை கும்பலுடன் காவல் ஆய்வாளருக்கு நீண்ட தொடர்பு - அதிர்ச்சி தரும் பரபரப்பு தகவல்கள்

ரூ.4 கோடி பணத்துடன் கார் கடத்தல் வழக்கில் சிக்கிய காவல் ஆய்வாளருக்கு கொள்ளை யர்களுடன் பல ஆண்டுகளாக தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப் படை போலீஸார் தெரிவிக்கின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் நகை வியாபாரி அன்வர் சதாத். இவரிடம் வேலை பார்க்கும் முகம்மது முஷிர், சிதோஷ், ஆனந்த ஆகியோர் கடந்த மாதம் 25-ம் தேதி சென்னை சென்றுவிட்டு ரூ.3.90 கோடியுடன் சொந்த ஊருக்குத் திரும்பி வந்துகொண்டு இருந்தனர். கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் போலீஸ் சீருடையுடன் வழிமறித்த கும்பல், சோதனையிடுவதுபோல் நடித்து அந்த காரை கடத்திச் சென்றது.

கார் மட்டும் கடத்தப்பட்டதாக அளித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்த னர். கடத்தப்பட்ட கார் கேரள மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட் டது. மலப்புரத்தைச் சேர்ந்த சபீக்(28), திருச்சூரைச் சேர்ந்த சுதிர்(33), சுபாஷ்(43) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். காரை கடத்த கரூர் பரமத்தி காவல் ஆய்வாளர் மற்றும் போலீ ஸார் துணைபுரிந்தனர் என்றும், தாங்கள் ரூ.1.90 கோடியை எடுத் துக்கொண்டு, மீதி ரூ.2 கோடியை போலீஸாருக்கு அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விவரங் கள் கரூர் போலீஸாருக்கு தெரி விக்கப்பட்டது.

ரகசிய இடத்தில் விசாரணை

அதன் அடிப்படையில், கரூர் பரமத்தி காவல்நிலைய ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோரை கரூர் டிஐஜி அருண், பணியிடை நீக்கம் செய்தார். 3 பேரையும் கோவைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: இந்த கொள்ளையில் திருச்சூர் கோடாலி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(60), அவரது மகன் அருண்(25) ஆகியோருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள் ளது. தென் மாநிலங்களில் உள்ள நகை வியாபாரிகளின் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க பல முனைகளில் ஆட்களை வைத்துள்ளார் கொள்ளைக் கும்பல் தலைவன் ஸ்ரீதரன். தனது ஆட்களையே கேரள நகைக் கடைகள், நகை வியாபாரிகளுக்கு வேலைக்கு அனுப்புவார். அவர் கள் கண்காணித்து பணம் எப்படி, எங்கு போகிறது என்ற விவரங்களை தெரிவிப்பார்கள். அதற்கேற்ப வியூகம் வகுத்து பணத்தை கொள்ளையடித்துச் செல்வது இவர்களின் வழக்கம்.

அப்படித்தான் அன்வர் சதாத் நகைக் கடையில் தனது ஆட்களை அனுப்பியுள்ளார் ஸ்ரீதரன். சென் னையிலிருந்து ரூ.4 கோடி பணத்துடன் வரும் அன்வர் சதாத் காரைப் பற்றி தன் ஆட்கள் மூலம் அறிந்த ஸ்ரீதரன், தனது ஆட்களை அனுப்பி காரைக் கடத்தி பணத்தை கொள்ளையடித்துள்ளார். அந்த கொள்ளையர்களுக்கு பரமத்தி காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீஸார் உதவியுள்ளனர்.

2000-ம் ஆண்டிலிருந்து 2002-ம் ஆண்டு வரை நாகர்கோவிலில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார் முத்துக்குமார். அந்த காலகட்டத்தில் தேங்காய்பட்டணம் பகுதியில் ஸ்ரீதரன் கும்பலிடமிருந்து ஹவாலா பணம் பிடிபட்டுள்ளது. அதில் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் நண்பராகி இருக்கிறார். அது முதல், ஹவாலா பணம் செல்லும் வழியைக் கண்காணித்து கும்பல் சொல்லும்போது தனது போலீஸ் தோரணையை காட்டி உதவி புரிந்துள்ளனர் என்றனர்.

மற்றொரு சம்பவத்தில்...

காவல் ஆய்வாளர் முத்துக் குமாரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஏற்கெனவே இது போன்ற மற்றொரு குற்ற சம்பவத் தில் அவர் சம்பந்தப்பட்டிருப்பதும், கரூர் மாவட்டம் தென்னிலை காவல் நிலைய தலைமைக் காவலர் அர்ஜுனன், பரமத்தி காவல் நிலைய தலைமைக் காவலர் பழனிவேலு ஆகியோர் உடந்தையாக இருந்த தும் தெரியவந்தது. இதையடுத்து, அர்ஜுனன், பழனிவேலு ஆகி யோரை விசாரணைக்காக போலீ ஸார் நேற்று மாலை கோவைக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x