

மதுரை அழகர் கோவில் அருகே பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக் கடையை மாண வர்கள், கிராமப் பெண்கள் நேற்று அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மதுரை- அழகர் கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொய்கைக் கரைப்பட்டி கிராமம் அமைந்துள் ளது. இக்கிராமத்தில் தனியார் கல்லூரி அருகே அரசு மதுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இக் கடை உச்ச நீதிமன்ற உத்தரவால் அண்மையில் அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக அழகர் கோவில் பிரதான சாலையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் மூனூர் கிராமத்தில் அரசு மதுக் கடையைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த இடத்தில் இருந்து 100 மீட் டர் தொலைவில் தனியார் பாலி டெக்னிக், அரசு தொடக்கப் பள்ளி கள் உள்ளன. மேலும் 50 மீட்டர் தொலைவில் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவோருக்கான மறு வாழ்வு மையம் செயல்படுகிறது. இதனால் அங்கு மதுக் கடையை திறக்கக் கூடாது என அப்பகுதி மக்கள், மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து அப் பகுதியில் மதுக் கடை திறக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் தொடர் விடுமுறையை பயன்படுத்தி மூனூரில் புதிய மதுக் கடையை அதிகாரிகள் திறந்தனர். இதை அடுத்து கடந்த 3 நாட்களாக அங்கு மது குடிப்பவர்கள் தொந்தரவு அதிகரிக்கத் தொடங்கியது. இத னால் ஆத்திரம் அடைந்த பொய் கைக்கரைப்பட்டி, நாயக்கன்பட்டி, மூனூர் ஆகிய கிராமப் பெண்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் மதுக் கடைக்கு எதிராக நேற்று திரண்ட னர். அவர்கள் பகல் 12 மணியள வில் கடையைத் திறக்க வந்த ஊழி யர்களை தடுத்து திறக்கவிடாமல் செய்தனர்.
மதுக் கடையில் அமைக் கப்பட்டிருந்த இரும்பு சீட்கள், ஷெட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். அறையின் கதவை உடைத்து, மது பாட்டில்களை நொறுக்க முயற்சி செய்தனர்.
இதை அறிந்த மேலூர் டிஎஸ்பி ராமசாமி, அப்பன் திருப்பதி காவல் ஆய்வாளர் தினகரன், மேலூர் மகளிர் ஆய்வாளர் விஜயலட்சுமி, மதுரை கிழக்கு பகுதி வட்டாட்சியர் கருப்பையா ஆகியோர் வந்து அங்கு திரண்டிருந்த மாணவர் கள், பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் முன் னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை தலைமையில் மூனூர் உட்பட 3 கிராம மக்கள், மாணவர்கள் பிரதான சாலையில் மறியல் செய்தனர். இவர்களிடம் போலீஸார், வட்டாட்சி யர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மூனூரில் திறக்கப்பட்ட மதுக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இங்கு மதுக் கடை திறக்கமாட்டோம் என உறுதியளித்தனர். சுமார் 45 நிமிடங் களுக்குப் பிறகு பொதுமக்கள், மாணவர்கள் கலைந்து சென்றனர்.
திடீர் சாலை மறியலால் அழகர் கோவில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.